புளோரன்ஸ் நைட்டிங்கேல் என்ற பிரிட்டிஷ் செவிலியர்1820ல் இதே நாளில் பிறந்தார். இவர் சமூக சீர்திருத்தவாதி மற்றும் நவீன நர்சிங் நிறுவனராகவும் போற்றப்படுகிறார். அவரது பிறந்த தினத்தை உலகம் முழுவதும் செவிலியர் தினமாக இன்று கொண்டாடுகிறார்கள். இதையொட்டி செவிலியர்களுக்குஅனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இன்று செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
செவிலியர் தினத்தையொட்டி புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இன்று செவிலியர்கள் கேக் வெட்டி கொண்டாடி, செவிலியர்களுக்கான உறுதிமொழி ஏற்றனர்.