பொள்ளர்ச்சி பாலியல் வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேந்தர் கூறியதாவது:
வழக்கு விசாரணையில் மின்னணு சாட்சியங்கள் முக்கிய பங்கு வகித்தன. அழிக்கப்பட்ட வீடியோக்களையும் மீட்டு எடுத்தோம். அதன் மூலம் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என கண்டுபிடித்தோம். 48 சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஒருவர் கூட பிறழ் சாட்சி ஆகவில்லை.
தொடர் பலாத்காரம், கூட்டு பலாத்காரம் , கூட்டு சதி, நடத்தப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப நிலை கருதி நிவாரணம் தர வேண்டும் என கோரி உள்ளோம். வீடியோக்களின் உண்மைத்தன்மை அறியப்பட்ட பின்னரே தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. சபரிராஜனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோ, ஆடியோ முக்கிய ஆதாரங்களாக கிடைத்தன. கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கேட்டு உள்ளோம். குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக சாகும்வரை ஆயுள் தண்டனை கிடைக்கலாம். குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் கிடைக்கலாம். உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கேட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஏதாவது கூற விரும்புகிறீர்களா என கேட்டபோது, தண்டனை வழங்கும்போது எங்கள் வயதை கருததில் கொள்ள வேண்டும் என குற்றவாளிகள் தரப்பில் கெஞ்சினர்.