சென்னை, சைதாப்பேட்டை அருகே கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
இளைஞர்கள் மத்தியில் தற்போது போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை அருகே டாட்டூ ஆர்ட்டிஸ்ட் திவாகர் என்பவர் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து டாட்டூ ஆர்ட்டிஸ்ட் திவாகர் என்பவரை கைது செய்த போலீசார் 3 கிலோ கஞ்சா, 104 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில், திவாகர் வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா, போதை மாத்திரைகளை வாங்கி சென்னையில் விற்பனையில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.