கரூர் மாவட்டத்தில் 91 தனியார் பள்ளியில் செயல்பட்டு வருகின்றன. அந்தப் பள்ளிகளில் 721 பள்ளி வாகனங்கள் இயங்கி வருகிறது. அந்த வாகனங்களின் தரம் மற்றும் செயல்பாடு, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, கரூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சார்பில் கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தப் பேருந்துகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேலு மற்றும் வட்டாரப்
போக்குவரத்து அலுவலர் தர்மானந்தம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் வெள்ளி பேருந்துகளை ஆய்வு செய்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களில் அவசர கால வழி மற்றும் முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவிகள் போன்றவை இல்லாத காரணத்தினால் மறுபரிசோதனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் பேருந்து ஓட்டுனர்களுக்கு சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அவசர காலத்தில் ஏற்படும் தடுப்பது குறித்து கரூர் மாவட்ட தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை நிகழ்ச்சியும் நடத்தி காட்டினார்கள்.
