பிரதமர் மோடி இன்று பஞ்சாப் மாநிலம் அதம்பூா் விமானப்படை தளத்துக்கு சென்றார். அங்கு ஆபரேசன் சிந்தூரில் ஈடுபட்ட வீரர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் பிரதமர் மோடி வீரர்கள் மத்தியில் பேசியதாவது: முப்படை வீரர்கள், எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு எனது சல்யூட், அணுஆயுத பிளாக் மெயிலுக்கு நாங்கள் அடிபணியமாட்டோம். நாட்டுக்காக தங்களது இன்னுயிரையும் தர வீரர்கள் தயாராக உள்ளனர். நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை பழிவாங்கி விட்டீர்கள்.
நமது வீரர்கள் தேசத்திற்காக உயிரை கொடுக்க தயாராகி விட்டனர். எதிரிகளால் நமது பாதுகாப்பு அரணை தகர்க்க முடியவில்லை. பாகிஸ்தானில் தீவிரவாதிகள் பதுங்க இடம் இல்லாத அளவுக்கு தாக்கி விட்டீர்கள். விமானப்படை வீரர்கள் புதிய வரலாறு படைத்துள்ளனர். நமது வீரர்களின் தியாகத்திற்கு நாடு என்றும் கடன்பட்டிருக்கும். ராணுவ வீரர்களின் சாதனை வருங்கால சந்ததிக்கு உந்துசக்தியாக இருக்கும். 20 நிமிடங்களில் 9 முகாம்களை தகர்த்தோம். விமானப்படையின் ஒவ்வொரு வீரருக்கும் என் நன்றிகள். பாகிஸ்தான் ட்ரோன்கள், ஏவுகணைகள் இந்தியாவுக்கு நிகரானவைகள் அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.