Skip to content

செல்லூர் ராஜூவை கண்டித்து ராணுவ வீரர்கள் போராட்டம்

இந்தியா-பாகிஸ்தான இடையே அண்மையில் நடைபெற்ற செந்தூர் ராணுவ தாக்குதல் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ராணுவ வீரர்கள் என்ன செய்தார்கள், அனைத்தையும் செய்தது பிரதமர் நரேந்திர மோடி தான் என ராணுவ வீரர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறி, அரியலூர் அண்ணா சிலை அருகில் முன்னாள் மற்றும் இந்நாள் ராணுவ வீரர்கள் தேசியக்கொடியை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ராணுவ வீரர்கள் குறித்து அவதூறாக பேசிய செல்லூர் ராஜு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், ராணுவ வீரர்களின் போராட்டம் தொடரும் என்றனர். மேலும், தங்களது உயிரை துச்சம் என நினைத்து நாட்டின் பாதுகாப்பிற்கு இரவு-பகல் பாராது கடும் குளிரிலும் பணியாற்றும் ராணுவ வீரர்களை அவதூறாக பேசியது கண்டிக்கத்தக்கது எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செல்லு ராஜு பகிரங்கமாக மன்னிப்பு கேட்காவிட்டால் அவரைக் கண்டித்து முன்னாள் இந்நாள் ராணுவ வீரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் அவர் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு எங்களது போராட்டம் தொடரும் எனவும் எச்சரித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய முப்படை ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் இந்நாள் ராணுவ வீரர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!