Skip to content

அரியலூர் அருகே மூளைச்சாவு-உடல் உறுப்புகள் தானம்- அரசு மரியாதை

அரியலூர் மாவட்டம் காவனூர் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் மூளைச் சாவு அடைந்ததால் அவரது உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டது. இதற்குப் பின்னர் உயிரிழந்த பாக்யராஜின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள காவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை மகன் பாக்கியராஜ்(40). விவசாயக் கூலித் தொழிலாளி. இவருக்கு சரண்யா என்ற மனைவியும் 10 வயதில் அட்சயா என்ற மகளும் 8 வயதில் சுபஸ்ரீ என்ற இரு மகள்கள் உள்ளனர். உறவினர் ஒருவரை சந்திப்பதற்காக இவர் கடந்த நாலாம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் இரும்புலிக்குறிச்சி அருகே சென்ற பொழுது, எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் பாக்கியராஜ் பலத்த காயமடைந்தார். உடனடியாக பாக்யராஜ் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு

சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் பாக்கியராஜ் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டார். அங்கு அவர் உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதும் பாக்யராஜ் மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து பாக்யராஜின் மனைவி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்மதத்துடன் பாக்யராஜின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டது. தானமாக அளிக்கப்பட்ட உடல் உறுப்புகள் திருச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் உயிரிழந்த பாக்யராஜின் உடலுக்கு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மரியாதை செலுத்தப்பட்டது. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தலைமை மருத்துவர் ரமேஷ் தலைமையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பாக்யராஜின் உடலுக்கு மாலையிட்டும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் பாக்யராஜின் உடன் அவரது சொந்த கிராமமாண காவனூருக்கு கொண்டு செல்லப்பட்டது. பாக்யராஜின் உடலுக்கு அரசு சார்பில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் மற்றும் செந்துறை தாசில்தார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

error: Content is protected !!