வாணியம்பாடி அருகே பாலாறு குறுக்கே கட்டப்பட்டு வரும் மேம்பால பணியின் போது மணல் கொள்ளை நடைபெற்றதாக கிராம நிர்வாக அலுவலர் கொடுக்கப்பட்ட புகார் மீது உரிய விசாரணை செய்யாததால் அம்பலூர் உதவி ஆய்வாளர் தற்காலிக பணியிடை நீக்கம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அம்பலூர் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு பாலாறு குறுக்கே கட்டுப்பட்டு வரும் மேம்பால பணிகளின் போது தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்த மணல்கள் மாயமானதாக அம்பலூர் கிராம நிர்வாக அலுவலர் பூபால் என்பவர் கொடுத்த புகார் மீது உரிய விசாரணை செய்யாமல் காலம் கடத்தி வந்த அம்பலூர் உதவி ஆய்வாளர் கண்ணன் என்பவரை தற்காலிக பணியிட நீக்கம் செய்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா உத்தரவிட்டுள்ளார்.
