Skip to content

புதுகை வல்லத்திராகோட்டை மாணவிகளுக்கு பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை ராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்ச்சி 88 சதவீதம்.  இந்த  பள்ளி மாணவி சஹானா  476/500 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மதிவதனி 474/500 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், பவித்ரா, தாரணி ஆகிய இருவரும் தலா 473/500 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடங்களும் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.

400 மதிப்பெண்களுக்கு மேல் 15 மாணவர்கள் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் குமார் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை வாழ்த்திப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். இந்நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்களும், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டு பெருமை தேடித்தந்த மாணவிகளை  பாராட்டினர்.

error: Content is protected !!