டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகனின் வீடு சென்னை மணப்பாக்கத்தில் உள்ளது. இன்று காலை முதல் அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 8 மணி நேர சோதனைக்கு பிறகு விசாகன் மற்றும் அவரது மனைவியை அமலாக்கத்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு தொடர்ந்து விசாகன் அவரது மனைவியிடம் விசாரணை நடக்கிறது. விசாகனின் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து நடக்கிறது.
