Skip to content

சென்னை-தடுப்பு சுவரில் மோதி தீப்பற்றி எரிந்த கார்- பரபரப்பு

சென்னை, பூந்தமல்லி அடுத்த பாப்பான் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பிரசாத் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக பூந்தமல்லி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பாப்பான்சத்திரம் பகுதியில் காரை யுடர்ன் செய்தார். அப்போது பெங்களூர் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி லேசாக காரின் பின் பகுதியில் உரசியதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்பு சுவரின் மீது மோதியதில் காரின் முன் பக்கம் நொறுங்கி அப்படியே தீப்பிடித்து எறிய ஆரம்பித்தது. இதனை கண்டதும் அந்த பகுதி மக்கள் ஓடி சென்று காருக்குள் சிக்கிக் கொண்டிருந்த பிரசாத்தை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர். பிரசாத்தை காரில் இருந்து மீட்ட சிறிது நேரத்தில் கார் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்து இதனை கண்டதும் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து பூந்தமல்லி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீ யணைப்பு வீரர்கள் சாலையில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த காரை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதில் பிரசாத் லேசாக காயங்களுடன் பிரசாத் உயிர் தப்பினார். இதில் கார் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
error: Content is protected !!