Skip to content

ஆபரேஷன் சிந்தூர் – மத்திய அரசு குழு அமைப்பு

ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க பல்வேறு கட்சிகளை சார்ந்த குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி ஜம்மு-காஷ்மீர் அருகே பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தது. இந்தியா நடத்திய இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.  இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் முற்றிய நிலையில், பாகிஸ்தான் வான் ஏவுதளங்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது.
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க பல்வேறு கட்சிகளை சார்ந்த குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க, காங்கிரஸின் சசி தரூர், பாஜகவின் ரவிசங்கர் பிரசாத், பாய்ஜெயந்த் பாண்டா, திமுகவின் கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே, சிவசேனா ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே, JDU சஞ்சய் குமார் ஜா ஆகியோர் அடங்கிய 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 7 குழுக்களும் விரைவில் சர்வதேச நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் பயங்கரவாத மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துக் கூறுவர்.
error: Content is protected !!