தமிழ்நாட்டில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று சென்னை, திருச்சி உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகிளல் பலத்த மழை கெபாட்டியது. இதுபோல மேட்டூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு உயா்ந்துள்ளது. இன்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 6,233 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது.
அணையின் நீர்மட்டம் 108.82 அடியாக இருந்தது.மேட்டூரில் மட்டும் 55.4 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனிடையே நேற்றும் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் மட்டுமல்லாது மேட்டூர் சுற்று வட்டாரத்திலும் கனமழை பெய்தது. குறிப்பாக மேட்டூரில் ஒரே நாளில் நேற்று 100.6 மில்லி மீட்டர் மழை கொட்டியது. தொடர் மழையின் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று 6,233 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணை இருப்பு 76.32 டிஎம்சியிலிருந்து, இன்று 76.74 டி.எம்.சி யாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து காவிரியில் வினாடிக்கு 1,000 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை வரும் ஜூன் 12ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் நீர் வரத்து அதிகரித்திருப்பதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.