Skip to content

நாட்றம்பள்ளி அருகே போலி டாக்டர் கைது..

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பந்தாரப்பள்ளி காமராஜ் நகர் பகுதியில் நிரல்பிஸ்வாஸ் என்பவரின் மகன் ரத்தின் (எ) பிஸ்வாஸ் இவர் முறையான மருத்துவம் படிக்காமல் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு நாட்றம்பள்ளி அடுத்த சண்டியூர் பகுதியில் மூலம், பவுத்ரம், வெடிப்பு உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்த ஆனந்தராமன் என்பவர் ரத்தின் (எ )பிஸ்வாஸிடம் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது ரத்தின்( எ) பிஸ்வாஸ் முறையான மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்ப்பதாக ஆனந்தராமனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இதுகுறித்து நேற்று ஆனந்தராமன் மாவட்ட இணை இயக்குனர் மற்றும் மருத்துவர் சுகாதாரப் பணி அலுவலர் ஞானம் மீனாட்சிக்கு புகார் மனு அனுப்பிள்ளார். பின்னர் இது தொடர்பாக மாவட்ட இணை இயக்குனர் ஞானம்மீனாட்சி உத்தரவின் பேரில் நாட்றம்பள்ளி தலைமை மருத்துவர் சிவகுமார் மற்றும் சித்த மருத்துவர் மாலா ஆகியோர் சண்டியூர் பகுதியில் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரத்தின் (எ)பிஸ்வாஸ் முறையான மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்ப்பது கண்டறியப்பட்டது மேலும் அவரிடமிருந்து 2000 ரூபாய் மதிப்பிலான மருந்து மற்றும் சிரஞ்சீ பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தலைமை மருத்துவர் சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் நாட்றம்பள்ளி போலீசார் போலி மருத்துவர் ரத்தின்( எ) பிஸ்வாஸ் என்பவரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
error: Content is protected !!