மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 12 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்த நிலையில், தெற்கு கொங்கன் – கோவா கடலோரப் பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. 36 மணி நேரத்தில் (நாளை மாலை) காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கேரளா – தமிழ்நாடு பகுதிகளில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மேற்கு தொடர்சி மலையையொட்டிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே மும்பையில் பலத்த மழை கொட்டி வருகிறது.
வழக்கமாக தென்மேற்கு பருவமழைஜூன் 1ம் தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு முன்னதாகவே மழை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
