சென்னை சைதாப்பேட்டையலி் 11 ம் வகுப்பு மாணவனை கத்தியால் வெட்டிய 5 பேரால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை தண்ணீர் கேன் போடும் வேலையில் இருந்த போது சிறுவனை சுற்றி வளைத்த 5பேர் கத்தியால் வெட்டினர். உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.