தமிழகத்தில் முக்கிய திருவிழாவில் ஒன்றான கரூர் மாரியம்மன் வைகாசி திருவிழா கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக வருகின்ற திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்களில் அமராவதி ஆற்றிலிருந்து ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி, அழகு, கரும்புத் தொட்டில், பால்குடம் எடுத்து நிறுத்திக் கடன் செய்ய இருக்கின்றனர்.
இதனை ஒட்டி கரூர் மாரியம்மன் கோவில் அருகே கரூர் மாவட்ட திமுக சார்பாக நீர் மோர் பந்தலை முன்னால் அமைச்சரும், கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வி. செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்.
அதை தொடர்ந்து ஆலயம் வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் நீர் மோர் வழங்கினர்.
இது நிகழ்ச்சியில் மாநகராட்சியின் மேயர், துணை மேயர் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.