Skip to content

இங்கிலாந்து மாஜி பிரதமர் ஜான்சன் 9 வது குழந்தைக்கு தந்தையானார்

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் (60). கொரோனா ஊரடங்கின்போது அலுவலக வளாகத்தில் அரசியல் தலைவர்களுக்கு பார்ட்டி கொடுத்தது உள்ளிட்ட சர்ச்சைகளில்  சிக்கியவர். தற்போது அரசியலில் இருந்து விலகி ஓய்வில் உள்ளார். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்தானது. கடந்த 2020-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரான கேரி (38) என்பவரை திருமணம் செய்து கொண்டு வசித்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், போரிஸ் ஜான்சன்-கேரி தம்பத்திக்கு 4-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. புதிய குழந்தைக்கு தந்தையானது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் போரிஸ் ஜான்சன் பதிவிட்டுள்ளார். ‘பாப்பி’ என பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தை, போரிஸ் ஜான்சனுக்கு 9-வது குழந்தை என கூறப்படுகிறது. போரிஸ் ஜான்சனுக்கு கேரியுடன் பிறந்த குழந்தைகள் தவிர முதல் மனைவியுடன் ஒரு குழந்தை, 2-வது மனைவியுடன் 4 குழந்தைகள் என ஏற்கனவே 5 குழந்தைகள் உள்ளனர். தற்போது கேரியுடனான 4-வது குழந்தைக்கு தந்தையானதை தொடர்ந்து 3 மனைவிகளுடன் 9 குழந்தைகளுக்கு போரிஸ் ஜான்சன் தந்தையாகி உள்ளார்.
error: Content is protected !!