திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம் பட்டி பகுதியை சேர்ந்த மதியழகன் மனைவி ஜெயசுந்தரி (64) இவர் சமோசா செய்யும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று வேலைக்கு செல்ல ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது விஷ்ணு (30) என்ற வாலிபர் திடீரென ஜெயசுந்தரியை ஓடி வந்து மூதாட்டியின் உதட்டை கடித்து துப்பியுள்ளார். இதனால் மூதாட்டி அலறி உள்ளார் இதன் காரணமாக அக்கம் பக்கத்தினர் விஷ்ணுவை பிடித்து தர்ம அடி கொடுத்து ஜோலார்பேட்டை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் ஜெய சுந்தரியை மீட்டு திருப்பத்தூர்
அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் ஒரு பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் விஷ்ணு மனம் எல்லாம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் தர்ம அடி வாங்கிய விஷ்ணுவை ஜோலார்பேட்டை போலீசார் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தனர். அதனைத் தொடர்ந்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். மூதாட்டியின் உதடை கடித்து துப்பிய வாலிபரால் ஜோலார்பேட்டை பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.