Skip to content

மாயனூர் காவிரி கதவணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு.

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை, 110 மதகுகள் கொண்ட கதவணையில் 1 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கலாம். இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் காவேரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணைக்கு நேற்று 31,169 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து இன்று காலை நிலவரப்படி 57,786 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

மாயனூர் காவிரி கதவணை முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் கதவணையிலிருந்து காவிரி ஆற்றிற்கு 33 மதகுகள் வழியாக 56,966 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் தென்கரை வாய்க்காலில் 500 கன அடியும், கட்டளை மேட்டு வாய்க்காலில் 300 கன அடியும், கிருஷ்ணராயபுரம் வாய்க்கால் 20 கன அடியும் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. காவேரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் பல்வேறு மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் இருக்கும் பொது மக்களை மேடான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

error: Content is protected !!