அரியலூர் மாவட்டம் கண்டிராதித்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் நடத்தி வந்த பெட்டி கடைக்கு சென்றுள்ளார். அப்பொழுது பாலகிருஷ்ணனின் பேத்தி கடைக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. கடைக்கு வந்த ரஞ்சித் குழந்தையை தலைகீழாக தூக்கி விளையாடியதாக கூறப்படுகிறது. இதனால் பாலகிருஷ்ணனுக்கும், ரஞ்சித்துக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித், பாலகிருஷ்ணனை கீழே தள்ளியதில் பாலகிருஷ்ணனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதை அறிந்து அங்கு வந்த பாலகிருஷ்ணனின் மகன் பாலாஜிக்கும், ரஞ்சித்துக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் பாலகிருஷ்ணனும் பாலாஜியும் சேர்ந்து, ரஞ்சித் குமாரை தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ரஞ்சித்தை மீட்ட அருகில் இருந்தவர்கள், சிகிச்சைக்காக திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்ந்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ரஞ்சித் உயிரிழந்தார்சம்பவ இடத்திற்கு சென்ற திருமானூர் போலீசார் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் பாலாஜி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தையை தூக்கி விளையாடிய தகராறில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை…
- by Authour
