Skip to content

குப்பம் மீன்பிடி துறைமுகத்தில் சமூக விரோதிகள் நடமாட்டமா?

சென்னை திருவொற்றியூர் குப்பம் அருகே உள்ள  மீன் பிடி  துறைமுகத்தை  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த சூரை மீன் பிடி துறைமுகத்தில் பலகைத் தொட்டி குப்பத்தைச் சேர்ந்த சுதேசன் என்பவர் படகு மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது , அங்கிருந்த மீனவர்கள் படகு எரிவதைக் கண்டு உடனே அணைத்தனர் இதில் படகு சிறிதளவு சேதம் அடைந்தாலும் சமூக விரோதிகளின் இந்த செயலால் மீனவரின் வாழ்வாதாரம்

பெரிதும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.  துறைமுகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் ஏதும் இல்லாததால் சமூக விரோதிகள் கூடாரமாக இந்த துறைமுகம் மாறி வருவதாக  மீனவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

போலீஸ் ரோந்து இல்லாததால்,  இந்த துறைமுகத்திற்குள் கஞ்சா  போதை ஆசாமிகள் நடமாடுவதாகவும்  கூறப்படுகிறது.  உடனடியாக கண்காணிப்பு கேமராக்களை வைக்க வேண்டும் என மீனவர்கள்  கோரிக்கை வைத்துள்ளனர்.

மீனவர்களின் வலைகள் கூட திருட்டு போகும் நிலையில் உடனடியாக கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

error: Content is protected !!