Skip to content

திருப்புவனம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட போலீசார் குடும்பம்

சிவகங்கை மாவட்டம்  திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம்  பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி,  போலீஸ் விசாரணையில் அடித்து கொலை செய்யப்பட்டாார். இந்த  கொலை வழக்கு தொடர்பாக 6 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்  செய்யப்பட்டனர். 2 ஏட்டுகள், 3 போலீஸ்காரர்கள்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதான ஏட்டுகள் கண்ணன், பிரபு,  போலீஸ்காரர்கள்  ராஜா,  சங்கரமணிகண்டன்,  ஆனந்த்  ஆகிய 5 பேரின் குடும்பத்தினர் இன்று  திருப்புவனம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கைது செய்யப்பட்ட போலீசாரின் மனைவி,  குழந்தைகள்  உள்ளிட்ட குடும்பத்தினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை  போலீசார் அப்புறப்படுத்தினர்.

error: Content is protected !!