சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜீத்குமார் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 2 ஏட்டுகள், 3 போலீசார் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டனர். மாவட்ட எஸ்.பி. ஆசிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்குமாற்றப்பட்டார்.
இந்த நிலையில், மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். இவரது தனிப்படையினர் தான் அஜீத்குமாரை தாக்கியதில் அவர் உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளதால் டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை டிஜிபி பிறப்பித்துள்ளார்.