நடிகர் விஜய் தவெக என்ற கட்சியை தொடங்கி அதற்காக ஒரு கொடியை அறிமுகம் செய்தார். மேலும், கீழும் சிவப்பு நிறம். நடுவில் மஞ்சள் நிறம். அதில் வாகை மலரின் இருபக்கமும் போர் யானை இருக்கும் வகையில் கொடி இடம் பெற்றிருந்தது.
இந்த யானை தங்கள் சின்னம், எனவே அந்த யானையை நீக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இது தொடர்பாக வரும் 3ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்தார். கொடியில் உள்ள யானையை நீக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டால் விஜய் மேல்முறையீடு செய்ய வேண்டும் , அல்லது கொடியில் மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.