பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் கிராமத்தில் பெரியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் மாதேஸ்வரன். இவருக்கு திருமணம் ஆகி 2 ஆண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் ரேவதியின் சொந்த ஊரான கொட்டாரக்குன்று கிராமத்தில் குடிபோதையில் சென்ற மாதேஸ்வரன் ரேவதியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது குடி போதையில் என்ன செய்வது என்று தெரியாத நிலை தடுமாறி வீட்டின் அருகில் உள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளார். கிணற்றில் 30 அடி ஆழத்தில் தண்ணீர் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக காயங்கள் படாமல் உயிர் தப்பினார். ரேவதியின் உறவினர்கள் அருகில் உள்ள காவல்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் கிணற்றில் இறங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாதேஸ்வரனை பாதுகாப்பாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கிணற்றில் தவறி விழுந்த போதை ஆசாமி மீட்பு…. பெரம்பலூரில் பரபரப்பு….
- by Authour

