மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மதியம் சென்னை அண்ணா அறிவாலயம் வந்தார். அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிக்கொண்டிருந்தார். பின்னர் வைகோ கூறியதாவது:
இமயமலையைக்கூட அசைக்கலாம். திராவிட இயக்கத்தை அசைக்க முடியாது. கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். திமுகவுக்கு எப்போதும் பக்கபலமாக இருப்போம். வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெறும்.
சனாதன சக்திகள், திராவிட இயக்கத்தை அசைத்து பார்க்க விரும்புகிறது. அது நடக்காது. மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்து பேசினேன். திருச்சியில் மதிமுக மாநாடு நடத்த இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.