வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கீழ் கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் சுதாகர் (45). இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை இவரது நிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டடப் பணிகளுக்கு தேவையான ஹலோ பிரிக்ஸ் கற்களை இவருக்கு சொந்தமான டிராக்டர் ஏற்றி வந்துள்ளார். அப்போது நிலத்தின் வழியாக வந்து கொண்டிருந்தபோது அங்கிருந்த மேடான பகுதியில் டிராக்டரை ஏற்ற முயன்று உள்ளார். டிராக்டர் மேட்டில் ஏற முடியாமல் திணறி உள்ளது. தொடர்ந்து இவர் மேட்டில் டிராக்டரை ஏற்ற தொடர்ந்து முயற்சித்துள்ளார்.
அப்போது டிராக்டரின் முன் பகுதி மேலே தூக்கி உள்ளது. டிராக்டரின் முன் பகுதி தூக்கியதில் டிராக்டரின் நடுவில் சிக்கிக்கொண்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து டிராக்டரின் இடுக்கில் சிக்கிய சுதாகரை மீட்டனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரோத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.