Skip to content

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 440 குறைவு…

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அவ்வப்போது விலை உயர்வதும் , குறைவதுமாக போக்கு காட்டி வரும் தங்கம் விலை,  கடந்த மாதம் இறுதியில்  தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்து வந்தது.  அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கடந்த வாரத்தில் மட்டும்  சவரனுக்கு ரூ.2,500 குறைந்தது.  இந்த நிலையில்  ஜூலை மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.

7 நாட்களுக்குப் பிறகு நேற்று  முன்தினம் தங்கம் விலை அதிரடியாக  சவரனுக்கு ரூ. 840 உயர்ந்து,  ஒரு சவரன் ரூ.72,160க்கு, கிராம்  ரூ.9,020க்கு விற்பனையானது.  தொடர்ந்து நேற்று    சவரனுக்கு ரூ.360 உயர்ந்து  ஒரு கிராம் 72,520 ரூபாய்க்கும்,  ஒரு கிராம் ரூ.9,065 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.  தொடர்ந்து மூன்றாவது நாளாக சவரனுக்கு ரூ.320 ஏற்றம் கண்ட தங்கம் விலை  சவரன் ரூ. 72,840க்கும், கிராம் ரூ.9,105க்கும் விற்பனையானது.

இந்நிலையில் 4 நாட்களுக்குப் பிறகு  இன்று தங்கம் விலை அதிரடியாக சரிந்திருக்கிறது.    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.72,400க்கு விற்பனையகிறது.  கிராம் ரூ.9,050க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 உயர்ந்த நிலையில் தற்போது விலை குறைந்திருப்பது  இல்லத்தரசிகளுக்கு சற்று மகிழ்ச்சி அளித்துள்ளது.  அதேபோல் சென்னையில் சில்லறை விற்பனையில் வெள்ளி கிராமுக்கு  ரூ.1 குறைந்து  ஒரு கிராம்  ரூ.120க்கு விற்கப்படுகிறது.

error: Content is protected !!