திருப்பத்தூர் மாவட்டம் பச்சூர் அடுத்த கள்ளியூர் பகுதியில் அமைந்துள்ள கல்குவாரியை அகற்றக்கோரி நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும் மனுவில் தெரிவித்திருந்தது கள்ளியூர் பகுதியில் அமைந்துள்ள கல் குவாரிக்கு வெடி வைத்தால் நாங்கள் புதிதாக கட்டி வந்த வீடுகளில் விரிசல் காணப்படுகிறது. நாங்கள் வீடு கட்டுவதற்கு தண்ணீர் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலிருந்து எடுத்து வந்து எங்கள் வீட்டை கட்டியுள்ளோம். மேலும் கல்குவாரி அமைத்தால் எங்கள் விவசாய நிலங்கள் பெரிதாக பாதிக்கப்படுகிறது காடுகள் இருந்தால்தான் எங்களுடைய வாழ்வாதாரமான ஆடு மாடுகள் மேய்க்க முடியும் இந்த கல்குவாரி
அமைந்ததால் ஆடுகள் மாடுகள் உணவுக்காக மிகவும் கடினமாக உள்ளது . பின்பு அதே போல் குடிப்பதற்கு குடி தண்ணீர் கிடைக்காமல் மிகவும் வேதனடைந்து வந்துள்ளோம்
மேலும் இந்த கல்குவாரி வீடுகளுக்கு அருகாமையில் இருப்பதால் எங்களின் நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது என மனுவில் குறிப்பிட்டு இருந்தது. மேலும் கல்குவாரி அகற்றாவிட்டால் அடுத்த கட்டமாக கல் குவாரி அருகாமையிலே சாலை மறியலில் ஈடுபடுவோம் என அப்பகுதி பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது