கரூர் பண்டரிநாதன் ரகுமாய் தாயார் உடன் ஆலயத்தில் சுவாமி திருவீதி உலா வெகு விமர்சியாக நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன் சுவாமி பஜனை மடத்தில் 102 ஆம் ஆண்டு ஆஷாட ஏகாதேசி விழாவை முன்னிட்டு கருவறைக்கு சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து இரவு ஆலயத்திலிருந்து ரகுமாய் தாயாருடன் சுவாமி பண்டரிநாதன் திருவீதி உலா காட்சியளித்தார். மேள தாளங்கள்
முழங்க ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சுவாமியின் திருவீதி உலா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தார். ரகுமாய் தாயாருடன் பண்டரிநாதன் சுவாமி திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் வழி எங்கிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.