Skip to content

ரயில் விபத்துக்கான காரணம் என்ன? முரண்பட்ட தகவல்கள்

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது  விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை  நோக்கிச் சென்ற ரயில் மோதியது. இந்த விபத்தில், 3 மாணவர்கள் பலியாகினர். மேலும்,  பலர்  படுகாயமடைந்தனர். அவர்கள்  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து ரயில்வே தொழிற்சங்க தலைவர் இளங்கோவன் கூறியதாவது: :

இன்டர்லாக்கிங் சிஸ்டம் என்றால் ரயில்வே கேட் மூடினால்தான் சிக்னலே வரும். நாடு முழுவதும் ரயில்வே வழித்தடங்களில் Inter Locking System முறையை கொண்டுவர வேண்டும். செம்மங்குப்பத்தில் Inter Locking System இல்லாததால் ரயில்வே கேட் திறந்திருந்தும் ரயில் சென்றுள்ளது என்றார்.

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன்:
ரயில்வே கேட்டை திறக்க சொல்லி கேட் கீப்பரை வலியுறுத்தியுள்ளனர் . செம்மங்குப்பம் ரயில்வே வழித்தடம் Non Inter Locking System ஆகும். மூடிய ரயில்வே கேட்டை திறந்ததால்தான் விபத்து நடந்துள்ளது. வேன் மீது மோதிய ரயில் 95 கி.மீ. வேகத்தில் வந்து கொண்டிருந்தது. விபத்தைத் தொடர்ந்து குறிப்பிட்ட வழித்தடத்தில் செல்லக்கூடிய 5 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

ரயில் விபத்துகளில் இன்டர்லாக்கிங் அமைப்பு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இன்டர்லாக்கிங் என்பது ரயில் பாதைகள், சிக்னல்கள் மற்றும் புள்ளிகளை ஒன்றோடொன்று இணைக்கும் ஒரு பாதுகாப்பு அமைப்பாகும். இது ரயில்கள் மோதிக் கொள்வதைத் தடுக்கவும், பாதைகள் மற்றும் சிக்னல்கள் சரியான முறையில் இருப்பதை உறுதி செய்யவும் பயன்படுகிறது

error: Content is protected !!