Skip to content

சென்னை மாநகராட்சி ஆணையர் மீது, ஐகோர்ட் தலைமை நீதிபதி காட்டம்

சென்னை மாநகராட்சியில்  உள்ள சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரும், முன்னாள் கவுன்சிலருமான ருக்மாங்கதன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடந்த 2021 டிசம்பரில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக ருக்மாங்கதன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது ஏன் என கேள்வி எழுப்பியது.

உத்தரவை அமல்படுத்ததாததற்காக சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், இத்தொகையை ஆணையரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து, அதை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க உத்தரவிட்டனர்.

மேலும், விதிமீறல் கட்டிடங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, ஜூலை 24 ம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்தனர்.

ரூ.1 லட்சம் அபராதத்தை நிறுத்தி வைக்க  ஆணையர் தரப்பில7் முறையிட்டபோது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் ,  கமிஷனரை நாளை நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

‘ஐஏஎஸ் அதிகாரி என்றால் நீதிமன்றத்தை விட மேலானவரா? நீதிமன்றத்தின் அதிகாரத்தை நாங்கள் காட்டலாமா? சென்னை மாநகராட்சி ஆணையர் நாளை நேரில் ஆஜராக வேண்டும்’  என உத்தரவிட்டார்.

error: Content is protected !!