பிரபல இந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லே, தற்போது 91 வயதை நிறைவு செய்து உள்ளார். வரும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி இவருக்கு 92வது பிறந்தநாள். மும்பையில் வசிக்கிறார். இதுவரை பல்லாயிரகணக்கான பாடல்கள் பாடி உள்ளார். தமிழ் மொழியிலும் பாடி உள்ளார். இவர் கடந்த 1ம் தேதி இறந்து விட்டதாக தற்போது வதந்தி பரவி வருகிறது. இதை ஆஷாவின் மகன் மறுத்துள்ளார்.
ஆஷா தனது 16 வயதில் 31 வயதான கண்பத்ராவ் போசுலே என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர் லதா மங்கேஷ்கரின் தங்கை ஆவார்.1987 ல் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம் பெற்ற “செண்பகமே செண்பகமே” என்ற பாடல் மூலம் தமிழில் அறிமுகமான ஆஷா தொடர்ந்து பல தமிழ் பாடல்களை பாடினார்.
