ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் யஷ் தயாள். உபி மாநிலத்தை சேர்ந்த இவருக்கு 27 வயதாகிறது. நடப்பு ஐபிஎல் போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐபிஎல் மூலம் பிரபலமான இந்திய கிரிக்கெட் வீரர் யஷ் தயாள் தற்போது பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு, ஒரு இளம் பெண் யஷ் தயாளுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
,இது குறித்து அந்த பெண் உ.பி. முதல்வருக்கும் புகார் செய்தார். தனது புகாரில், கடந்த ஐந்து ஆண்டுகளாக யஷ் தயாளுடன் காதலில் இருந்ததாக கூறியுள்ளார். அதற்கான ஆதாரங்களையும் அவர் காட்டி உள்ளார்.
திருமணம் செய்து கொள்ளவதாக கூறியதால், நான் அவருடன் நெருங்கி பழகினேன். யஷ் தயாள் என்னை அவரது குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்தி, எப்போதும் ஒரு கணவனைப் போலவே நடந்துகொண்டார். அதனால் நான் அவரை நம்ப ஆரம்பித்தேன்.
பின்னர் தான் அவரது மோசடிகள் தெரிந்தது. இதுபற்றி கேட்டபோது நான் தாக்கப்பட்டேன். மன ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டேன். இந்த விவகாரம் விரைவில் சட்ட வழிமுறைகள் மூலம் நியாயமாக விசாரிக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கை தனக்கு மட்டுமல்ல, இதுபோன்ற உறவுகளுக்கு பலியாகிற அனைத்து பெண்களுக்கும் முக்கியமானது என்றும் அந்தப் பெண் கூறியுள்ளார்.
இந்த புகாரின் மீது உ.பி. போலீசார் வழக்குப்பதிவு செய்து தயாளிடம் விசாரணை நடத்தினர். போலீசில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.