பாமக நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணிக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் கட்சியை இரண்டாக உடைத்து உள்ளது. பாமக தலைவர் யார் என்பதில் இருவரும் மோதி வருகிறார்கள்.
இந்த நிலையில், இன்று விருத்தாசலம் வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. தனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி இருந்ததை 2 தினங்களுக்கு முன்புதான் கண்டுபிடித்தேன். ஒட்டுக் கேட்கும் கருவியை யார், எதற்காக பொருத்தினர் என்பது தெரியவில்லை. லண்டனில் இருந்து வாங்கப்பட்டுள்ள விலை உயர்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி அது. ஒட்டுக் கேட்கும் கருவியை யார் வைத்தார்கள், எதற்காக வைத்தார்கள் என்று ஆராய்ச்சி செய்து வருகிறோம் .
இவ்வாறு அவர் கூறினார்.