திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் மாவட்டம் முழுவதும் அதிரடி வேட்டையில் இறங்கி உள்ளனர். திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று திடீரென நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், டவுன் சர்வேயர் தையல்நாயகியை பிடித்து துருவி துருவி விசாரிக்கிறார்கள்.
இதுபோல துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வேயர் ராம்குமார் என்பவரிடமும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். லஞ்சப்புகார்கள் வந்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி வேட்டை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இதனால் இரு தாலுகா அலுவலங்களிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.