Skip to content

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை… வாலிபருக்கு தண்டனை உறுதி.. திருப்பத்தூர் கோர்ட்

  • by Authour

ஆந்திரா மாநிலம் சித்தூரைச் சேர்நத்த ரேவதி 4- மாத கர்ப்பிணிப் பெண் இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் டெய்லராக பணியாற்றி வருகிறார்.

தனது சொந்த ஊரான சித்தூருக்கு செல்வதற்கு கடந்த இரண்டாம் மாதம் திருப்பூர் ரயில்வே நிலையத்தில் கோயம்புத்தூர் வழியாக திருப்பதி செல்லும் இன்டர் சிட்டி விரைவு ரயிலில் பயணம் செய்தபோது

கர்ப்பிணி பெண் ரயில் கழிவறைக்கு சென்றபோது அங்கும் ஒருவர் தொடர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் கர்ப்பிணி பெண் கூச்சலிட்டதால்

ஆத்திரமடைந்த அந்த நபர் 4-மாத கர்ப்பிணி பெண்ணை வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டுவிட்டு ரயில் காட்பாடி நிலையம் வந்ததும் அந்த நபர் இறங்கிச் சென்றுள்ளார்.

ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டதில், கர்ப்பிணிக்கு கை கால் முறிவு ஏற்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுருக்கிறது.

இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்

கர்ப்பிணியை மீட்ட ரயில்வே காவல்துறையினர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்

அப்போது படுகாயமடைந்த கர்ப்பிணி பெண்ணிடம் ரயில்களில் குற்றங்களை செய்யும் பதிவேடு குற்றவாளிகளின் புகைப்படங்களை காண்பித்து ரயில்வே போலீசார் விசாரித்த போது

கர்ப்பிணிப் பெண் ஹேமராஜின் புகைப் படத்தை அடையாளம் கண்டு கூறி இருக்கிறார்.

இதனை அடுத்து ஹேமராஜை கேவி குப்பம் செல்லும் வழியில் ரயில்வே போலிசார் கைது செய்தனர். மேலும் இவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதன் வழக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி மீனா குமாரி ஹேமராஜுக்கு தண்டனையை உறுதி செய்துள்ளார்.

அவர் செய்த குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் முதல் சாகும் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வருகின்ற திங்கட்கிழமை தண்டனை வழங்கப்படவும் உள்ளது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.டி.சரவணன் வாதாடினார்.

மேலும் ஹேமராஜால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசால் மருத்துவ செலவுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!