கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 3 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம் கட்டிடம் கட்டும் பணியினை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
இதில் மாநகராட்சி ஆணையர் கவிதா , துணை மேயர் தாரணி சரவணன், அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு கரூர் மாவட்டத்தில் 30% மேல் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் அவதூறுகளை பரப்பி வருகின்றனர். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெறும். எதிர்க்கட்சியினர் சில அவதூறுகளை பரப்பி வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டு ஆட்சி காலத்தில் எந்த திட்டமும் செய்யாமல் செய்ததாக கூறி வேறு ஒருவர் பெற்ற பிள்ளைக்கு பெயர் வைப்பதை போல சொல்கின்றனர் என அதிமுகவை விமர்சனம் செய்தார்.