அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன. அதற்குள் மேலும் பல கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரும். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். எங்கள் கூட்டணி வலிமையாக , ஒற்றுமையாக உள்ளது.
திமுக ஆட்சியால் மக்களுக்கு நன்மை இல்லை. சட்டம் ஒழுங்கு சரியில்ல. உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் முதல்வர் நாடகம் நடத்தி பொதுமக்களின் செல்போன் எண்களை பெற்று வருகிறார்.
எனவே சுற்றுப்பயணத்தில் மக்கள் எழுச்சியை பார்கக்க முடிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 தினங்களுக்கு முன் கூட்டணி ஆட்சி என்று கூறிய நிலையில் அவருக்கு பதில்அளிக்கும் வகையில் தனித்து ஆட்சி என்று பாஜகவுக்கு பதில் அளித்து உள்ளார்.