Skip to content

நடிகை சரோஜா தேவி காலமானார்..

நடிகை சரோஜா தேவி (87) இன்று காலமானார்.  அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் சரோஜா தேவி.  எம்ஜி ஆர் , சிவாஜி கணேசன் , ஜெமினி கணேசன் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்களுடன் பல்வேறு படங்களில் நடித்தவர். 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்,கன்னடம், தெலுங்கு, மலையாளம் ,இந்தி மொழிப் படங்களில் நடித்துள்ளார். இந்திய திரையுலக வரலாற்றில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக போற்றப்படுபவர் சரோஜா தேவி. மத்திய அரசின் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் ஆகிய விருதுகளையும் வென்றுள்ளார் சரோஜா தேவி. வயது முதிர்வு காரணமாக இன்று பெங்களூருவில் உள்ள இல்லத்தில் உயிரிழந்தார் சரோஜா தேவி. திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!