தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நிர்வாகிகள் மத்திய கூட்டுறவு வங்கிக்கு அண்ணா நகரில் உள்ள அவரது அண்ணாமலை நகரில் உள்ள வீட்டில் கூடியிருந்தனர். பின்னர் மத்திய கூட்டுறவு வங்கி நோக்கி புறப்பட ஆயத்தம் ஆகினர். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை விடாமல் தடுத்து நிறுத்தி சிறைவைத்தனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறும்போது, தமிழக துணை முதல்வர் திருச்சி வருகை காரணமாக சற்று நேரம் கழித்து போராட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் அவர்களுக்கு போராட அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
திருச்சியில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு வீட்டில் சிறை வைப்பு
- by Authour
