புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏக்களாக இருந்த பாஜகவை சேர்ந்த ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் ராஜினாமா செய்தனர். அதைத்தொடர்ந்து பாஜகவை சேர்ந்த செல்வம், தீப்பாய்ந்தான், ராஜசேகர் ஆகியோர் புதிய நியமன எம்.எல்.ஏக்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். அத்துடன் ஏற்கனவே பாஜக எம்.எல்.ஏவாக உள்ள ஜான் குமார் அமைச்சராக பதவி ஏற்றார். அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
புதுச்சேரியில், அமைச்சர், 3 எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு
- by Authour
