Skip to content

ரயிலில் திடீர் தீ விபத்து! திருப்பதியில் பரபரப்பு

திருப்பதி ரயில் நிலையம் அருகே சுத்தம் செய்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈஷார் ரயிலின் ஒரு பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அருகில் நின்ற சீமான் எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜினுக்கும் தீ பரவியது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் 2 பெட்டிகள் முழுவதுமாக எரிந்து நாசமாகின. விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கடந்த 2 நாட்களில் இரண்டாவது நாளாக ரயில் தீவிபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!