Skip to content

காமராஜர் பிறந்தநாள்… திருச்சியில் அமைச்சர் மகேஸ் மாலை அணிவித்து மரியாதை

திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக பெருந்தலைவர் கல்விக்கண் திறந்த காமராசர் அவர்களின் பிறந்த நாளான இன்று சத்திரம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள காமராசரின் திருவுருவ சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பள்ளி

மாணவ மாணவிகளுக்கு நிதியுதவிக்கான காசோலைகள் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கினார். அதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பள்ளி மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில் மண்டல தலைவர் மதிவாணன் ,மற்றும் திமுக நிர்வாகிகள் ,காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர் .

error: Content is protected !!