திருச்சி மாநகரம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இதன் காரணமாக மத்திய பஸ் நிலையம் அமைந்துள்ள பகுதியில், போக்குவரத்து நெருக்கடிகள், விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதனை தடுக்க மத்திய பஸ் நிலையத்தை பஞ்சப்பூருக்கு(மதுரை ரோடு) மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி அங்கு சுமார் 480 கோடியில் புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டப்பட்டது. இதனை கடந்த மே மாதம் 9ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த பஸ் நிலையத்துக்க கலைஞர் கருணாநிதி பெயரும் சூட்டப்பட்டது.
இந்த புதிய பஞ்சப்பூர் பஸ் நிலையம் நாளை(புதன்) முதல் செயல்படும் என திருச்சி மாவட்ட கலெக்டர் வே. சரவணன் நேற்று பத்திரிகையாளர்களிடம தெரிவித்தார்.
அதன்படி சென்னை, பெரம்பலூர் மார்க்கத்தில் வரும் பஸ்கள் அனைத்தும் நம்பர் 1 டோல்கேட்டில் இருந்து நேராக பஞ்சப்பூர் சென்று அதே வழியில் திரும்பும்.
தஞ்சை மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து பஸ்களும், பழைய பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் பஸ் நிலையம் செல்ல வேண்டும். அதே மார்க்கத்தில் திரும்ப வேண்டும்.
பெங்களூரு, சேலம், நாமக்கல் வழித்தடத்தில் வரும் பஸ்கள் நம்பர் 1 டோல்கேட்டில் இருந்து பஞ்சப்பூர் சென்று, அதே வழியில் திரும்ப வேண்டும்.
திருப்பூர், கோவை, கரூர் வழித்தடத்தில் வரும் பஸ்கள், சத்திரம் பஸ் நிலையம் வந்து வழக்கம் போல திருச்சி மத்திய பஸ் நிலையம் வந்து அங்கிருந்து மன்னார்புரம ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் சென்று அதே வழீயில் திருமு்ப வேண்டும்.
ராமேஸ்வரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாா்க்கத்தில் வரும் பஸ்கள், திருச்சி விமான நிலையம் வந்து டிவிஎஸ் டோல்கேட், , மன்னார்புரம் ரவுண்டானா வந்து பஞ்சப்பூர் சென்று அதே வழியில் திரும்பும்.
குமுளி, கம்பம், திண்டுக்கல், மணப்பாறை வழியாக வரும் பஸ்கள், கருமண்டபம், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் பஸ் நிலையம் சென்று அதே வழியில் திரும்ப வேண்டும்.
திருவனந்தபுரம், நாகர்கோவில், நெல்லை, மதுரை மார்க்கத்தில் வரும் பஸ்கள், தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் பஸ்நிலையம் வந்து, அதே வழியில் திரும்ப வேண்டும். இவர்கள் பழைய மத்திய பஸ் நிலையத்துக்கு இனி வராது.
பெரம்பலூர், ஜெயங்கொண்டம், அரியலூர், நெய்வேலி, கடலூர் பஸ்கள் வழக்கம் போல சத்திரம் பஸ் நிலையம் வந்து அதே நிலையில் இயக்கப்படும்.
சென்னை, திருப்பதி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், புதுச்சோரி, காஞ்சிபுரம் வழித்தட பஸ்கள் நம்பர் 1 டோல்கேட்டில் இருந்து பழைய பால்பண்ணை வழியாக பஞ்சப்பூர் சென்று அதே வழியில் திரும்ப வேண்டும்.
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பஞ்சப்பூருக்கு அடிக்கடி டவுன் பஸ்கள் இயக்கப்படும்.
ஆம்னி பஸ்கள், பழைய மத்திய பஸ் நிலையத்துக்கு வரக்கூடாது. ஆம்னி பஸ்கள் அனைத்தும் பஞ்சப்பூா் பஸ் நிலையம் அருகே ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காட்டுப்புத்தூர், முசிறி அடுத்த மேட்டுப்பாளையம் போன்ற இடங்களில் இரு்நது வரும் பஸ்கள் வழக்கம்போல பழைய மத்திய பஸ் நிலையத்துக்கு வந்து செல்லும்.