திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த மண்டலநாயன குண்டா பக்கிரிகான் மட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (39) இவருடைய மனைவி முத்துலட்சுமி இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் நான்காவது 11 மாத பெண் குழந்தையான கவியாழினி சில மாதங்களாக உடல்நிலை சரி இல்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த மாதம் 19 ஆம் தேதி குழந்தை உயிரிழந்து உள்ளது. உந்தன் காரணமாக பெற்றோர்கள் குழந்தையை அருகே உள்ள தென்னந்தோப்பில் புதைத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கந்திலி கந்திலி வட்டார மருத்துவர்
உமாதேவி கடந்த ஏழாம் தேதி கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் வேலூர் அடுக்கம்பரை உடற்கூறு ஆய்வு ஸ்பெஷலிஸ்ட் பாலாஜி சம்பவ இடத்திற்கு இன்று வந்து திருப்பத்தூர் வட்டாட்சியர் நவநீதம் முன்னிலையில் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்து வருகிறார். மேலும் குழந்தையின் உடல் பாகங்களை சேகரித்து மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு குழந்தை எவ்வாறு உயிரிழந்தது என்பது குறித்து அறிக்கை அளிக்கப்படும் எனவும் தகவல் தெரிவித்தார்.
மேலும் ராஜ்குமாருக்கு நான்கும் பெண் குழந்தை என்பதன் காரணமாக குழந்தையை சாகடித்து புதைதனரா? அல்லது உண்மையில் உடல்நிலை சரியில்லாமல் குழந்தை உயிர் இழந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.