கோவையில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் தமிழக வளர்ச்சிக்கான 123 காமராஜரின் திட்டங்களை தமிழ்நாடு வரைபடமாக கண்முன் நிறுத்திய காமராஜர் வேடமணிந்த மாணவர்கள் அசத்தல்.
பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது,
தமிழகம் முழுவதிலும் உள்ள தொடக்க பள்ளி முதல் உயர்நிலை பள்ளி வரை காமராஜரின் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அனைத்து பள்ளிகளிலும் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி என போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றது. இந்நிலையில் கோவை மாவட்டம், கோவைபுதூர் பகுதியில் உள்ள ஆஸ்ரம் பள்ளியில் காமராஜரின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் அவர் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் குறித்த பதாகைகள் ஏந்திய மாணவர்கள் கவனம் ஈர்த்துள்ளனர்..
காமராஜரின் இலவச கட்டாயக் கல்வி, பள்ளிகள் சீரமைப்பு, தொழில் வளர்ச்சி, விவசாய வளர்ச்சி, மின்சார உற்பத்தி,போன்ற தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற காமராஜரின் முக்கிய திட்டங்களை பதாகைகளாக கையில் ஏந்திய காமராஜர் வேடமணிந்த மாணவர்கள் தமிழ்நாடு வரைபடமாக தத்ரூபமாக அணிவகுத்து நின்றனர்..