Skip to content

எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி… அமைச்சர் தாமோ.அன்பரசன்

தியாகிகள் தினத்தையொட்டி சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார், தியாகி செண்பகராமன் ஆகியோர்களின் திருவுருவச் சிலைகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

அந்த வகையில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகராஜா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை அரசு செயலாளர் ராஜாராமன், செய்தி

மக்கள் தொடர்பு துறை இயக்குனர் வைத்திநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பரசன்,

அதிமுக கட்சி திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது தொடர்பான கேள்விக்கு,இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் அவர் வீக்காக இருக்கிறார்.

திமுக கூட்டணி கொள்கை கூட்டணி, வலுவான கூட்டணி, இது மக்களுக்காக உழைக்கும் கூட்டணி
அதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி, அது உருப்படாது, தேறாது என்றார்.

பாஜகவினர் கூட்டணி ஆட்சி தான் அமைக்கும் என்று சொல்கிறார்கள், பழனிச்சாமி நான்தான் முதல்வர் என்று சொல்கிறார், தனித்து ஆட்சி அமைப்போம் என்று இதுவரை சொல்லவில்லை, அவர்களுக்குள்ளே குழப்பம் நிலவுகிறது,இது தேர்தலுக்குப் பிறகும் நிலவும்.

2026 ல் தனியாக வந்தாலும் சரி மொத்தமாக வந்தாலும் சரி திமுக ஆட்சி அமைப்பது எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது, திமுக தொண்டர்கள் கையில் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

திமுக கட்சி என்ன செஞ்சாலும் அதற்கு கூட்டணி கட்சிகள் ஜால்ரா போட்டுக்கொண்டு தான் இருக்கும் என்று எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி சொன்னது தொடர்பான கேள்விக்கு.,

எதிர்க்கட்சிக்காரன் அப்படிதான் பொறாமையில் பேசுவான், வைத்தெரிச்சலில் இருக்கிறார்கள் அப்படிதான் பேசுவார்கள் என்றார்.

error: Content is protected !!