கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் 54 ஆம் ஆண்டுவைர பெருமாள் நினைவு புறா போட்டி பந்தயம் நடைபெற்றது. இப்போட்டி சாதா புறா, கர்ண புறா ஆகிய 2 பிரிவுகளில் நடைபெறுகிறது. சாதா புறா போட்டி இன்று தொடங்கியது. இதில் 11 புறாக்கள் உரிமையாளர்கள் கலந்துகொண்டு புறாக்களை பறக்க விட்டனர். இப்போட்டியை முன்னாள் மாமன்ற உறுப்பினர் வை. நெடுஞ்செழியன் மற்றும் குழுவின் மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இன்று துவங்கிய 18.19.20 ஆகிய மூன்று நாட்கள் இந்த சாதா புறா போட்டி நடைபெறும் இதில் சாதா புறாவின் கண்கள் மஞ்சள் அல்லது
சிவப்பு நிறமாக இருக்க வேண்டும் சாதா புறாவின் நிறம் கருப்பு மற்றும் சிகப்பு நிறமாக இருக்க கூடாது சாதா புறா ஒரு நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் பறக்க வேண்டும் புறா உட்காரும் இடத்தில் நான்கு இறக்கை வெட்டு புறா இருக்க வேண்டும்உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் உடன் போட்டி நடைபெற்றது வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி கர்ண புறா போட்டி நடைபெற உள்ளதுஇந்த இரண்டு புறா போட்டியிலும் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது.